நாங்கள் செய்வது என்ன

மாடுலர் கிச்சன்கள்

நடைமுறை அம்சங்களையும், அழகிய டிசைனையும் இணைத்து, நீங்கள் எதிர்பார்க்கின்ற கனவு சமையலறைக்கான மாடுலர் டிசைனை வழங்குகிறோம்.

உங்கள் ஸ்லீக் கிச்சனுக்கு 10 வருட உற்பத்தி குறைபாடுகள் உத்தரவாதம்

ஃபர்னிச்சர்

உங்கள் வீட்டின் அழகை மேலும் மெருகூட்டுகிற மிகச்சிறந்த ஃபர்னிச்சர் கலெகஷ்னக்ளிலிருந்து உங்கள் மனதிற்கு பிடித்ததை தேர்ந்தெடுங்கள். கலெகஷ்னக்ளிலிருந்து – கலெகஷ்னகளிலிருந்து

ஃபர்னிஷிங்குகள்

உங்களது பெர்சனாலிட் டியை பிரதிபலிக்கின்ற சரியான ஃபர்னிஷிங்குகளையும, கலைப்பொருட்களையும் தேர்வுசெய்யுங்கள்.

லைட்டிங்

பிரம்மாண்டமான சேன்ட்லியர்ஸிலிருந்து மிக நவீன டாஸ்க் லைட்டிங் வரை உங்களது வீட்டில் ஸ்டைல் அம்சத்தை இணைப்பதற்காக, சரியான லைட்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தப்படும்.

பெயிண்டிங் மற்றும் வால்பேப்பர்கள்

உங்கள் வீட்டில் அறைகளின் சுவருக்கு வண்ணம் தீட்ட திறன்மிக்க பெயிண்டர்கள் மற்றும் பெட்ரூமில் கண்கவர் வால்பேப்பர் வரை உங்களது தேவைகள் எதுவாக இருப்பினும்- அனைத்தையும் நாங்கள் நேர்த்தியாக பூர்த்திசெய்கிறோம்.

குறிப்பிட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் பொருட்களுக்கு மட்டும் உத்தரவாதம் பொருந்தும்.

மாடுலர் வார்ட்ரோப்கள்

உங்களது பெட்ரூமை மேலும் அழகுற மேம்படுத்த வார்ட்ரோப்-க்கான சரியான அளவு, ஸ்டைலிஸ் வடிவமைப்பு டிசைன்களை கண்டறியுங்கள்.

உங்கள் ஸ்லீக் வார்ட்ரோப்-க்கு 5 வருட உற்பத்தி குறைபாடுகள் உத்தரவாதம்

பாதுகாப்பு தரநிலைகள்

பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ் பயன்கள்

Expert house interior designers for your home design services - Beautiful Homes

இன்டீரியர் டிசைன் நிபுணர்கள்

இன்டீரியர் டெகரேஷன் செய்ய நீங்கள் திட்டமிடும்போது திறமையான, நம்பகமான புரொஃபஷனல்களை கண்டறிவதே நீங்கள் செய்கிற மிக முக்கியமான முடிவாக இருக்கும். பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ்-ல் அனுபவம் வாய்ந்த இன்டீரியர் டிசைனர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவின் கையில் உங்களது டிசைன் பணி இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

Personalised interior design services for your dream home - Beautiful Homes

தனித்துவ சேவைகள்

ஒவ்வொரு இல்லமும் அதன் உரிமையாளர்களது தனித்துவமான வெளிப்பாடாக இருக்கும். உங்களது இல்ல டிசைன், உங்களது தனித்துவமான இரசனைக்கேற்ப இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஃபர்னிச்சரை உருவாக்குவதிலிருந்து ஃபர்னிஷிங் மற்றும் லைட்டிங்கை தேர்வுசெய்வது வரை ஒவ்வொரு அம்சமும் உங்களது டிசைன் உணர்வை பிரதிபலிப்பதாக நிச்சயம் இருக்கும்.

Advanced 3D visualisation of your house interior design before execution - Beautiful Homes

நவீன 3D விஷ்வலைசேஷன்

உங்களது இல்ல அலங்காரம் (டெகார்) குறித்த முடிவுகள் என்னவாக இருக்கும் என்று எமது 3D விஷ்வலைஸரை கொண்டு எங்களால் சரியாக கணிக்கமுடியும். உங்களது இல்லம் எப்படி உருவாக்கப்போகிறது என்று பார்ப்பதற்கு ஒரு உகந்த வழிமுறையாக இது இருக்கிறது. பணி தொடங்குவதற்கு முன்பு டிசைனில் நீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்யவும் இது உங்களை அனுமதிக்கிறது.

End to end home interior design service for your humble abode - Beautiful Homes

முழுமையான சர்வீஸ்

உங்கள் கனவு இல்லத்திற்கான இன்டீரியர் டிசைனை தருவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றபோது, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் நிம்மதியாக, ரிலாக்ஸாக இருப்பது மட்டுமே. கருத்தாக்கத்திலிருந்து உருவாக்கம் வரை, திட்டமிடலிலிருந்து செயலாக்கம் வரை ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் எமது நிபுணர்கள் குழு நேர்த்தியாக செயல்படுத்தும்.

Dedicated project manager for your home design & renovation project - Beautiful Homes

புராஜெக்ட் மேலாண்மை

உங்களது இல்ல சீரமைப்பு பணிக்கு (ரெனோவேஷன்) ஒரு பிரத்யேக புராஜெக்ட் மேனேஜர் பொறுப்பானவராக இருப்பார். இந்த சர்வீஸை நீங்கள் புக்கிங் செய்தவுடனேயே அவரது பொறுப்பு தொடங்கிவிடும். உங்களது இன்டீரியர் டிசைன் பணி உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படுவதையும் மற்றும் பணிகள் தடங்கலின்றி நேர்த்தியாக நடப்பதையும் அவர் கண்காணித்து உறுதிசெய்வார்.

Elegant wall painting design by Asian Paints - Beautiful Homes

சிக்னேச்சர் வால்ஸ் (முத்திரை பதிக்கும் சுவர்கள்)

பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ் வழியாக அழகான சுவர்களை உருவாக்க ஏசியன் பெயிண்ட்ஸ் தயாரிப்புகள் உறுதுணையாக உங்களுக்கு இருக்கும். நேர்த்தியான “நிலையா வால்” கவரிங்ஸ் மற்றும் டெக்ஸ்சர்டு ஃபினிஷஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இத்தயாரிப்புகள் உங்களது இல்ல இன்டீரியர்களை இன்னும் மேம்படுத்தி அழகூட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்டவை.

செயல்படும் முறை

முதற்கட்டம்

நிபுணர்களுடன் சந்திப்பு
Home interior design & décor experts - Beautiful Homes
பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ் பிரிவின் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES), ஆன்லைன் வீடியோ கன்சல்டேஷன் வழியாக தொடர்புகொள்வார். உங்களது டிசைன் தேவைகள் மற்றும் இரசனைகளை உங்களிடம் கேட்டு புரிந்துகொள்வார்; அதன் பிறகு எமது டிசைன் செயல்முறை வழியாக உங்களுக்கு கலந்தாலோசனை வழங்குவார்.

இரண்டாம் கட்டம்

முதலில் கன்சல்டேஷன், அதைத் தொடர்ந்து விஷ்வலைசேஷன்
உங்களுக்காக டிசைன் செய்த 2D டிசைனை எமது டிசைனர் உங்களுக்கு காட்டி விளக்கமளிப்பார். மேலும் நீங்கள் முனப்திவு செய்தவுடன் எமது மிக நவீன விஷ்வலைசரை பயனப்டுததி உங்களது இல்லத்தின் 3D டிசைனை அவர் உங்களிடம் காட்டுவார். இந்த டிசைனில் விரும்புகிற மாற்றங்களை நீங்கள் செய்யலாம்; அதனை நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம்.

மூன்றாம் கட்டம்

டிசைன் மாற்றஙக்ள்; அதைத் தொடர்ந்து இறுதி டிசைன்

இந்த நிலையில் எமது CES, டிசைனுக்கான கொட்டேஷனை உங்களுக்கு வழங்குவார்.

பேமெண்ட் ; 1: 15% தொகையை ஆன்லைன்/காசோலை வழிமுறையில் பேமெண்ட் செய்யலாம்.

நான்காம் கட்டம்

ஆன்சைட் செயலாக்கம்

தேவைப்படும் மெட்டீரியல்களை தேர்ந்தெடுப்பதில் எமது CES உங்களுக்கு உதவுவார்; புராஜெக்ட்டுக்கான கால அட்டவணையை எமது புராஜெக்ட் மேனேஜர் உருவாக்குவார். இந்த நிலையில் உங்களின் இறுதி ஒப்புதலுக்காக, இது தொடர்பான ஆவணங்களை CES உங்களுக்கு வழங்குவார்.

பேமெண்ட் 2: அப்டேட் செய்த கொட்டேஷன் தொகையில் 55%-ஐ நீங்கள் இந்நிலையில் செலுத்த வேண்டும்.

ஐந்தாம் கட்டம்

கட்டுமானம் மற்றும் சைட் இன்ஸ்டலேஷன்

நீங்கள் ரிலாக்ஸாகவும், நாங்கள் தீவிரமாகவும் பணியாற்ற வேண்டிய தருணம் இது. புராஜெக்ட், மிக நேர்த்தியாக செயல்படுதத்ப்படுவதை CES உறுதிசெய்வார். பணியில் முன்னேற்றம் குறித்து அப்டேட்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.

பேமெண்ட் 3: இந்த நிலையில் இறுதித் தொகையை நீங்கள் செலுத்துவீர்கள்.

ஆறாம் கட்டம:

பியூட்டிஃபுல் ஹோம்ஸ் - ஒப்படைப்பு
பணிகள் முடிவடைந்தவுடன்,உங்கள் இல்லத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உங்களை அழைத்துச் செல்லும் CES, செய்யப்பட்ட பணிகளை விவரங்களுடன் விளக்குவார். உங்கள் வீட்டின் பராமரிப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர் உங்களுக்கு தகவல்களை தருவார் மற்றும் திருப்தியாக பணிகள் முடிக்கப்பட்ட உங்கள் இல்லத்தை உங்களிடம் ஒப்படைப்பார்.
Home interior design & décor experts - Beautiful Homes

Our Ad Films

Miss Management

With Beautiful Homes Service, all you do is sit back and relax. We take care of everything for you: from personalized designs to hassle-free execution!

Spot the difference

You are unique & your home interiors should reflect that uniqueness. Get fully personalized designs and stand-out from the crowd!

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ் என்பது என்ன?

உங்களது கனவு இல்லத்தின் டிசைனை வடிவமைப்பது முதல் இறுதியாக பணிகளை பூர்த்தி செய்து தரும் வரை (சைட் ஹேண்ட்ஓவர்), இன்டீரியர்ஸ் செயல்பாடுகளை நேர்த்தியாக மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிற ஒரு முழுமையான, முற்றிலும் பிரத்யேகமான சேவையே பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ்.

எனது வீட்டிற்கு மிக அடிப்படையான பணி செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். எனது தேவைகளுக்கு இந்த சர்வீஸ் பொருத்தமாக இருக்குமா?

ஆம், நிச்சயமாக இருக்கும். உங்களது இன்டீரியர் தேவைகளுக்கு பிரத்யேக தீர்வுகளை பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ் வழங்குகிறது. உங்களது எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் புரிந்துகொள்ள எமது டிசைனர்கள் உங்களிடம் விரிவாக பேசி, உங்களது இரசனைக்கும், தேவைக்கும் ஏற்றவாறு உங்கள் அமைவிடத்தை வடிவமைக்க உதவுகின்றனர். நீங்கள் நினைத்த விஷயங்களை செய்து முடிக்கக்கூடிய சர்வீஸாக இந்த பியூட்டிஃபுல் ஹோம்ஸ் சர்வீஸ் நிச்சயம் இருக்கும்.

இந்த சர்வீஸை நான் புக்கிங் செய்தால், முழு வீட்டிலும் டிசைன் பணியை செய்ய வேண்டியிருக்குமா?

இல்லை. உங்களது சீரமைப்பு ஒரு பகுதி அல்லது ஒரு அறை என்பதாக மட்டும் இருந்தாலும்கூட இந்த சர்வீஸை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் நான் இல்லாதபோது, அங்கு நடைபெறும் பணிகளை யார் மேற்பார்வை செய்வார்?

உங்களது அனைத்து சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு உரிய பதிலும், தீர்வும் வழங்குபவராக எங்களது கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) இருப்பார். புராஜெக்ட் முழுவதையும் முன்னின்று வழிநடத்துபவராகவும், பணியின் முன்னேற்றம் பற்றி உங்களுக்கு தகவல் தெரிவிப்பவராகவும் அவரே இருப்பார்..

பணி நடைபெறும் அமைவிடத்தை நான் அடிக்கடி பார்வையிடுவது அவசியமா?

இல்லை. எமது கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) உங்களது பணி அமைவிடத்தின் பொறுப்பாளராக இருப்பார். சைட் விசிட் செய்து பணியின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது உங்களுக்கு அவர் தகவலளிப்பார்.

எனது இரசனைக்கேற்ப எனது வீட்டின் டிசைனை உருவாக்கிக்கொள்ள எனக்கு அனுமதி உண்டா?

நிச்சயமாக. உங்களது தேவைகளுக்கு பொருத்தமான மிகச்சிறந்த பிரத்யேக டிசைன்களை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம். எமது கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) மற்றும் இன்டீரியர் டிசைனருடன் சேர்ந்து உங்களுக்கு பிடித்தமான டிசைனை நீங்கள் தாராளமாக முடிவு செய்யலாம்.

எனது வீட்டில் வெவ்வேறு அறைகளுக்கு வெவ்வேறு தீம் களை நான் தேர்வுசெய்யலாமா?

கண்டிப்பாக‚ எடுக்கப்படும் ஒவ்வொரு டிசைன் முடிவிலும் உங்களது பங்களிப்பு இருக்கும். உங்களது கருத்தை கேட்டு அதை கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) -வும், இன்டீரியர் டிசைனரும் டிசைனில் இடம்பெறச்செய்வார்கள். டிசைனிங் பணியின்போது அனைத்து நிலைகளிலும் உங்களது சம்மதத்தை அவர்கள் கேட்டறிவார்கள். இறுதி டிசைன், உங்களது இரசனைகள் மற்றும் பிரபலமாகத் திகழும் டிரெண்ட்களின் அடிப்படையில் தான் இருக்கும்.

எனது தேவைகளையும் ; விருப்பங்களையும் தெரிவிக்க இன்டீரியர் டிசைனரை எப்போது நான் சந்திப்பது?

உங்களது தேவைகளை புரிந்துகொள்ளவும், வீட்டின் புளோர் பிளான்-ஐ பெறவும் உங்களை முதலில் தொடர்புகொள்பவராக எமது கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) -வே இருப்பார். இப்பணியின் செயல்முறையை விரிவாக அவர் விளக்கி உங்களது தேவைகளையும், விருப்பத்தையும் புரிந்துகொள்வார். உங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்து தெளிவுபடுத்துவார். இரண்டாவது சந்திப்பின்போது, CES மற்றும் இன்டீரியர் டிசைனர் உங்கள் 2D டிசைன் ஆப்சனை உங்களுக்கு விளக்குவார் மற்றும் எமது மிக நவீன 3D விஷ்வலைஸரிலும் இந்த டிசைனை நீங்கள் பார்ப்பீர்கள். அதில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றால், எமது இன்டீரியர் டிசைனர் உடனடியாகவே அந்த மாற்றங்களை செய்து காண்பிப்பார்.

இந்த சர்வீஸ் வழியாக எனது விருப்பத்தின்படி உருவாக்கப்படும் ஃபர்னிச்சர் எனக்கு கிடைக்குமா?

ஆம், நிச்சயமாக கிடைக்கும். உங்களது தேவைகளுக்கு பொருத்தமான ஃபர்னிச்சரை உருவாக்க எமது கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) மற்றும் இன்டீரியர் டிசைனருடன் நீங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றலாம்.

எனது வீட்டிற்காக உருவாக்கப்படும் டிசைனை எப்படி நான் பார்ப்பது?

டிசைன் எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்ப்பதற்கு உதவ உங்களது வீட்டின் 2D டிசைன்களை எமது இன்டீரியர் டிசைனர் முதலில் உங்களிடம் காட்டுவார். இதைத் தொடர்ந்து 3D விஷ்வலைஸரை பயன்படுத்தி வீட்டின் 3D டிசைன்களை காண்பிப்பார். அதன்பிறகு, அவசியமான மாற்றங்களை செய்வதற்கும், உங்களுக்கு எது சிறப்பாக இருக்கும் என்று புரிந்துகொள்ள வெவ்வேறு ஆப்ஷன்களை முயற்சிக்கலாம் மற்றும் டிசைனரோடு சேர்ந்து நீங்கள் மாற்றங்களை செய்யலாம்.

எத்தகைய சேவைகளை நீங்கள் வழங்குகிறீர்கள் மற்றும் அவைகளை நான் ஏன் தேர்வுசெய்ய வேண்டும்?

முழுமையான டிசைன் மற்றும் உங்களது வீட்டின் இன்டீரியர்ஸ் (உட்புற அலங்காரம்) செயல்பாடு எமது சேவைகளில் உள்ளடங்கும். ஃபர்னிச்சர், ஃபர்னிஷிங்குகள், லைட்டிங்ஸ், மாடுலர் கிச்சன்கள், அக்ஸசரீஸ்கள், பெயிண்டிங் மற்றும் சிவில் ஒர்க் ஆகிய அனைத்தும் இச்சேவைகளில் இடம்பெறுகின்றன. அந்தந்த துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்களால் உங்களது விருப்பங்களை மனதில் வைத்து துல்லியமாகவும் மற்றும் டிசைன் நேர்த்தியோடும் ஒவ்வொன்றும் உருவாக்கப்படுகிறது. உங்களது வீட்டின் டிசைன் முற்றிலும் உங்களுக்கென பிரத்யேகமாக இருப்பதை இது உறுதிசெய்யும். அதுமட்டுமன்றி, டிசைனிங் செயல்முறை முழுவதிலும் உங்களது பங்களிப்பு இருக்கும்ƒ உங்களது கனவு வீடு எப்படி இருக்கப்போகிறது என்று காணவும் உங்களால் இயலும்;. உங்களது அழகான இல்லத்தை நாங்கள் உருவாக்குகின்றபோது நிபுணத்துவமிக்க புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் முற்றிலும் புரொஃபஷனலான அனுபவம் உங்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது.

எந்தெந்த நகரங்களில் இந்த சர்வீஸ் இயங்கி வருகிறது?

இன்றைய தேதிக்கு, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, அஹமதாபாத், சென்னை, பெங்க;ரு, ஹைதராபாத், கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நாங்கள் இச்சேவையை வழங்குகிறோம். உங்களது பகுதியில் நாங்கள் செயல்படுகிறோமா என்று அறிய இந்த படிவத்தை தயவுசெய்து பூர்த்தி செய்து வழங்கவும்.

இந்த புராஜெக்ட்டின் ஒட்டுமொத்த காலஅளவிலும் நான் தொடர்புகொள்ளும் நபராக யார் இருப்பார்?

புராஜெக்ட்டின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை உங்களது தொடர்பு நபராக கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (CES) இருப்பார். இந்த காலகட்டத்தில் உங்களது கேள்விகளுக்கு விளக்கமளித்து தீர்வு வழங்குபவராக அவர் இருப்பார்.

வடிவமைப்பு சேவைகள்

இப்போது அற்புதமான EMI சலுகைகளுடன்

© Beautiful Homes 2019 | All rights reserved